×

அரசு அதிகாரி வீட்டில் 13 மணி நேரம் சோதனை: பல கோடி ஆவணங்கள் சிக்கியது

நெல்லை: அரசு அதிகாரி வீட்டில் 13 மணி நேரம் நடந்த சோதனையில் பல கோடி ஆவணங்கள் சிக்கியது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் முருகேஷ் (49). இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் பாளையங்கோட்டை ரகுமத்நகரில் குடியேறினார். இவர் நெல்லை, தூத்துக்குடி உட்பட சில மாவட்டங்களில் மாவட்ட தொழில் மைய துணை மேலாளராகவும், மேலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளராக பணியிடம் மாற்றப்பட்டார்.

அப்போது அவர் மீது எழுந்த சில புகார்கள் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அவர், பாளையங்கோட்டை ரகுமத்நகரிலுள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துவிட்டார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் நேற்று நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏடிஎஸ்பி மெக்லரின் எஸ்கால் தலைமையில் போலீஸ் படையினர் பாளை ரகுமத்நகரிலுள்ள முருகேஷூக்கு சொந்தமான அலுவலகத்திலும் அவரது வீட்டிலும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை 13 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 390 ஆவணங்களும், 20 பவுன் தங்க நகைகளும், ரூ.1.77 லட்சம் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு உயரதிகாரிகளின் அனுமதியை கேட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post அரசு அதிகாரி வீட்டில் 13 மணி நேரம் சோதனை: பல கோடி ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi District ,Dinakaraan ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும்...